விவசாயிகளுக்கு ரூ. 53.75 லட்சம் மானியம்: மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் கறிக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் கோழிப் பண்ணைகள் அமைப்பதற்கு
விவசாயிகளுக்கு ரூ. 53.75 லட்சம் மானியம்: மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் கறிக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் கோழிப் பண்ணைகள் அமைப்பதற்கு 20 விவசாயிகளுக்கு அரசு மானியமாக ரூ. 53.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி கலந்து கொண்டு பேசியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் வகையில் விவசாயம் மட்டுமன்றி வேறு தொழில்களில் விவசாயிகளை ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் கறிக்கோழி வளர்ப்புத் திட்டம் 2016-2017-இன் கீழ் 20 விவசாயிகளுக்கு அரசு மானியமாக ரூ. 53 லட்சத்து 75 ஆயிரம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம், சிறிய அளவிலான நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம், புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம் மற்றும் கறிக்கோழி வளர்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கறிக்கோழிக் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 5,000 பறவைகள் கொண்ட 20 அலகுகள் கறிக்கோழிப் பண்ணை அமைக்க காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதில், ஒவ்வொரு பயனாளிகளுக்கும் கொட்டகை, தீவனம், தளவாடங்கள் மற்றும் குஞ்சுகள் வாங்குவதற்கு ரூ. 2 லட்சத்து 68 ஆயிரத்து 750-ஐ அரசு மானியமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக 13 பயனாளிகளுக்கு அரசு மானியமாக ரூ. 35 லட்சத்து 93 ஆயிரத்து 750-ஐ பயனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செளரிராஜன், மாவட்ட வன அலுவலர் ரிட்டோ சிரியாக், இணை இயக்குநர் சீதாராமன், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ஜெகதீசன், கூட்டுறவு இணைப் பதிவாளர் சா.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லதா பானுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com