ரூ. 5 லட்சம் வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது

காஞ்சிபுரத்தில் ரூ. 5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 4.65 லட்சம் ரொக்கத்தை மீட்டனர்.

காஞ்சிபுரத்தில் ரூ. 5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 4.65 லட்சம் ரொக்கத்தை மீட்டனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் பிரேம்குமார் (54). இவர், பெட்ரோல் பங்கில் வசூலான விற்பனைத் தொகையை இரவு வீட்டுக்கு எடுத்துச் சென்று, மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி பிரேம்குமார் ஒரு பையில் ரூ. 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் வங்கிக்குச் சென்று கொண்டிருந்தார். மூங்கில் மண்டபம் சிக்னல் அருகே நின்றபோது தலைக்கவசம் அணிந்தபடி பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பிரேம்குமாரிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி ஸ்ரீநாத் தலைமையில் காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
விசாரணையில், அதே பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த விஜய்க்கு (24) தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவரை கண்காணித்தபோது, வழிப்பறி செய்த பணத்தைப் பிரிக்க தனது நண்பர்களுடன், வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கில் மாமல்லபுரம் சென்றபோது வாகனச் சோதனையில் பணத்துடன் பிடிபட்டார்.
தொடர் விசாரணையில், விஜய் தனது நண்பர்கலான அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் (22), நவீன்குமார் (20) ஆகியோருடன் இணைந்து வழிப்பறி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ. 4.65 லட்சம் ரொக்கத்தை மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com