காஞ்சிபுரம் ஒன்றியம் கனகசுப்புரத்தினம் நகரில் மேற்கொள்ளப்பட்ட பணிகளைப் பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பி.அமுதா. உடன், மாவட்ட ஆட்சியர் பொன்னையா.
காஞ்சிபுரம் ஒன்றியம் கனகசுப்புரத்தினம் நகரில் மேற்கொள்ளப்பட்ட பணிகளைப் பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பி.அமுதா. உடன், மாவட்ட ஆட்சியர் பொன்னையா.

ரூ. 3 கோடி மதிப்பில் 21 குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு

காஞ்சிபுரம் நகராட்சியில் சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 41 குடிநீர் திட்டப் பணிகளில் இதுவரை 21 பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.

காஞ்சிபுரம் நகராட்சியில் சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 41 குடிநீர் திட்டப் பணிகளில் இதுவரை 21 பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வறட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் பி.அமுதா, மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா ஆகியோர் தலைமை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர், வேளாண்மைத் துறையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்தும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடைகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உலர் தீவனப்புல் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், பசுந்தீவனப் புல் வளர்ப்பது குறித்தும் அசோலா வளர்த்தல் குறித்தும் கேட்டறிந்தார். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்தும் கேட்டறிந்தார். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: நகராட்சிகளைப் பொருத்தவரை குடிநீர் விநியோகம் செய்திட 41 பணிகள் ரூ.299.95 லட்சம் மதிப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டு 21 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 20 பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
முதற்கட்டமாக 56 குடிநீர் திட்டப் பணிகள் ரூ. 2.36 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 55 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஒரு பணி மட்டும் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்டமாக 14 பணிகள் ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டதில் 2 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 12 பணிகள் நடைபெற்று வருகின்றன. பேரூராட்சிகளில் 450 குடிநீர் திட்டப் பணிகள் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு 448 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதில் 2 பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஊரகப் பகுதியில் முதற்கட்டமாக 102 குடிநீர் திட்டப் பணிகள் சுமார் ரூ. 2.53 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு 37 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 65 பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக 393 பணிகள் 8.44 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு 43 பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 350 பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
பின்னர் கண்காணிப்பு அலுவலர், காஞ்சிபுரம், ஒன்றியம் சிறு காவேரிப்பாக்கத்தில் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் இயற்கை இடர்பாடு நிதி 2016-2017-ல் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு குழாய் இணைப்புகள் மூலம் பாலாஜி நகர் மற்றும் இ.பி.அவின்யூ பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் விநியோகம் செய்து தரப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டார்.
கனக சுப்புரத்தினம் நகரில் மாவட்ட ஊராட்சி நிதி மூலம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.செளரிராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் மற்றும் கோட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com