சிவானந்த குருகுலத்தில் குழந்தைகள் தின விழா: அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஸ்ரமத்தில் குழந்தைகள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவானந்த குருகுலத்தில் குழந்தைகள் தின விழா: அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஸ்ரமத்தில் குழந்தைகள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவானந்த குருகுல ஆஸ்ரம வளாகத்தில் உள்ள எஸ்.வி. ஐயர் கலை அரங்கத்தில் நடந்த இவ்விழாவிற்கு, ஆஸ்ரமத்தின் பொது செயலாளர் ராஜாராம் தலைமை வகித்தார். பொருளாளர் பந்து சந்தோக்,
இணைச் செயலாளர் கிஷோர்குமார் ராஜாராம், தலைமை ஆசிரியர்கள் வசந்தி, நரசிம்மன், செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி, முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: அன்றைய காலத்தில் கல்வி அரசாங்கத்திடம்
இருந்தது. மது தனியாரிடம் இருந்தது. இப்போது கல்வியை தனியாரிடத்தில் தந்துவிட்டு மதுவை அரசாங்கம் நடத்திவருகிறது. கல்வி என்பது மாணவர்களிடேயே திறன், தொழில், அறிவு ஆகியவற்றை
வளர்க்கக் கூடியவையாக இருக்க வேண்டும். நீட் தேர்வில் நம் மாணவர்கள் அதிகம் வெற்றி பெறுவதில்லை என்றால் அதற்குக் காரணம் சி.பி.எஸ்.சி கல்வி முறையை சமச்சீர் கல்வியில் திணிப்பதுதான். 
இது எப்படி இருக்கிறது என்றால், பல் மருத்துவம் (பி.டி.எஸ்) படிக்கும் மாணவர்களை எம்.பி.பி.எஸ் தேர்வு எழுதச் சொன்னால் எப்படி எழுத முடியும்? இப்படி எழுதச் சொல்வது தான் நீட் தேர்வு. 
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தரமான கல்வியை அளிக்கவேண்டும். 
நீர்நிலை மேலாண்மையைப் பாதுகாத்திட ஆந்திரஅரசு பாலாற்றில் 32 கி.மீ. தூரம் 22 தடுப்பணைகள் கட்டியுள்ளது. 
கர்நாடக அரசு பாலாற்றில் 93 கி. மீ. தூரம் 18 தடுப்பணைகள் கட்டியுள்ளது. ஆனால், நீர் நிலை மேலாண்மையைப் பாதுகாத்திட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடுப்பணை
கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 
இனியும் தண்ணீர் தட்டுப்பாடு, வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படவேண்டும். ஏரி, குளம், குட்டைகள் என ஆக்கிரமிப்பை அகற்றி
தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மதுராந்தகம் ஏரி மட்டும் சுமார் 800 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றார். 
விழாவில், முன்னாள் ரயில்வே அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம், தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் ப.மணி, ஜூகோ லிமிடெட் மேலாளர் கிஷோர், ஆஸ்ரம நிர்வாகிகள்,
ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com