புதிய கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் மனு

விவசாயம், இருளர் குடியிருப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புதிய கல்குவாரிக்கு தடைவிதிக்கக் கோரி உத்தரமேரூர் வட்டம், அரும்புலியூர் கிராமத்தினர் மனு அளித்தனர். 
புதிய கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் மனு

விவசாயம், இருளர் குடியிருப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புதிய கல்குவாரிக்கு தடைவிதிக்கக் கோரி உத்தரமேரூர் வட்டம், அரும்புலியூர் கிராமத்தினர் மனு அளித்தனர். 
அரும்புலியூர் ஊராட்சியைச் சேர்ந்த சீத்தாவரம், பழவேரி கிராமத்தினர் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் முகாமில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 
கிராமத்தின் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்கு அருகில் பாறைகள் அரைக்கும் அரைவை நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில், சீத்தாவரம், பழவேரி கிராமத்துக்கு அருகிலேயே பல
கல்குவாரிகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இக்குவாரிகளிலிருந்து நாள்தோறும் பாறை, ஜல்லிக் கற்கள், கல் துகள்களை ஏற்றியவாறு பல கனரக வாகனங்கள் சென்று வந்த வண்ணம் உள்ளன. 
இதனால், அதிகளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. தற்போது, எங்களது கிராமத்துக்கு 200 மீ தொலைவில் புதிதாக கல்குவாரி அமையவுள்ளது. ஏற்கெனவே உள்ள கல்குவாரிகளில் வெடிக்கும்
வெடி சப்தம் காரணமாக கிராம சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் பெரும் அதிர்வு ஏற்பட்டும், வீடுகள் இடியும் அபாயகரமான சூழலும் ஏற்பட்டுள்ளது. அதுபோல், 100 மீ தொலைவில் இருளர் குடியிருப்புப் பகுதி உள்ளது. 
தற்போது புதிய கல்குவாரி அமைக்கப்பட்டால், இருளர்களுக்கான இருப்பிடம் பறிபோகும். 
அதுபோல், கிராம மக்களின் உடல் நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். அத்துடன், அருகில் நிறைய விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலங்கள் பாதிப்படைவதோடு, நிலத்தடி நீர், ஏரி, கண்மாய்கள்மாசடைவதோடு, நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, எங்கள் கிராமப் பகுதிகளில் குடிநீர் பிரச்னை உள்ளது. இந்நிலையில், புதிய கல்குவாரி அமைந்தால், குடிநீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகும் என அச்சத்தில் உள்ளோம். அதுபோல், ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்குவாரிகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, கிராம மக்களின் பாதுகாப்பு கருதி, எவ்வகையிலும் புதிய கல்குவாரி (பாறை கற்கள் அரைவை நிலையம்) அமைக்க அனுமதி தராமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com