14 மாதங்களாக அரசிடமிருந்து பணம் வராததால் ஊராட்சிப் பணிகள் பாதிப்பு: கிராம சபைக் கூட்டத்தில் புகார்

லத்தூர் ஒன்றியம் தட்டாம்பேடு ஊராட்சிக்கு 14 மாதங்களாக அரசிடமிருந்து பணம் வராததால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம சபைக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. 
14 மாதங்களாக அரசிடமிருந்து பணம் வராததால் ஊராட்சிப் பணிகள் பாதிப்பு: கிராம சபைக் கூட்டத்தில் புகார்

லத்தூர் ஒன்றியம் தட்டாம்பேடு ஊராட்சிக்கு 14 மாதங்களாக அரசிடமிருந்து பணம் வராததால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம சபைக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. 
தட்டாம்பேடு ஊராட்சி செய்யூர் தொகுதி, லத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த தட்டாம்பேடு ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபைக் கூட்டம் லத்தூர் ஒன்றிய வட்டார ஒருங்கிணைப்பாளர் கோ.ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.ஊராட்சி செயலர் பாலசுந்தரம் வரவேற்றார். இதில் செய்யூர் தொகுதி எம்எல்ஏ மருத்துவர் ஆர்.டி. அரசு, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அ.நாசினி பேகம், லத்தூர் ஒன்றிய திமுக செயலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இக்கூட்டத்தில், ஊராட்சிப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்படாமல் முடங்கி கிடப்பதால், ஊராட்சிமன்ற நிர்வாகம் அவற்றை சீரமைக்க வேண்டும் என்றனர். அப்போது, எம்எல்ஏ ஆர்.டி.அரசு குறுக்கிட்டு, ஊராட்சியில் பணம் கையிருப்பு பற்றி கேட்டார். அதற்கு ஊராட்சிமன்றச் செயலாளர் கடந்த 14 மாதங்களாக அரசிடமிருந்து பணம் முழுமையாக வரவில்லை. தற்சமயம் கையிருப்பு தொகை ரூ.7,520 மட்டுமே உள்ளது. அதனால் தான் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை உள்ளது என்றார். இதையடுத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
சிறுநல்லூர் ஊராட்சியில்... 
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சிறுநல்லூர் ஊராட்சியின் கிராமசபைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பிரசன்ன வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இக்கூட்டத்தில் பாமக பிரமுகர் சிவலிங்கம் கலந்து கொண்டு சிறுநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட முதுகரை கிராம மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் துர்நாற்றத்துடன், சுகாதாரமின்றி உள்ளது. அதனால் குடிநீர் கிணறு, நீர்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்ய வேண்டும். முதுகரையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதை சரி செய்ய வேண்டும் என்றார். இதற்கு ஊராட்சிமன்ற செயலர் தினேஷ்பாபு கூறுகையில், குடிநீர் ஆய்வு செய்யும் கோரிக்கையை ஏற்று தீர்மானமாக பதிவு செய்யப்படும். முதுகரை கிராமத்தில் உள்ள தடுப்பணையை சரி செய்தால் சிறுநல்லூர் ஏரிக்கு மழைநீர் வராது என்றார். இதையடுத்து முதுகரை, சிறுநல்லூர் கிராமத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம சபைக்கூட்டம் 10 நிமிடத்திலேயே பாதியில் முடிந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com