டெங்கு காய்ச்சல் எதிரொலி: விரைகிறது 26 அதிரடி மருத்துவக் குழுக்கள்

டெங்கு காய்ச்சல் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் 26 காய்ச்சல் தடுப்பு அதிரடி மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைகின்றனர் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் எதிரொலி: விரைகிறது 26 அதிரடி மருத்துவக் குழுக்கள்

டெங்கு காய்ச்சல் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் 26 காய்ச்சல் தடுப்பு அதிரடி மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைகின்றனர் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளி மாணவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் டெங்கு ஒழிப்பு உறுதிமொழியை வியாழக்கிழமை எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளுக்கு செல்லும் நடமாடும் மருத்துவக் குழுக்களை தொடங்கி வைத்தார். பின்னர், மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினார்.
அப்போது, அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சல் எதிரொலியாக, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல், டெங்கு ஒழிப்பு தினம் வியாழக்கிழமை தோறும் கடைபிடிக்கப்பட உள்ளது. அவ்வகையில், மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை நாள்களைத் தவிர்த்து, 5 நாள்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படும். அதுபோல், மாவட்டத்தில் 14 நடமாடும் மருத்துவக் குழு, 26 காய்ச்சல் தடுப்பு அதிரடி மருத்துவக் குழு வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புகையடிக்கும் கருவியுடன், ஒரு மருத்துவக் குழுவில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், 5 கொசு ஒழிப்பு பணியாளர்கள் (மஸ்தூர்) ஆகியோர் இருப்பர். இக்குழுக்கள், காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர். மேலும், பள்ளி, கல்லூரி, அரசு வளாகங்கள், அரசு, தனியார், பொது நிறுவனங்களில் வியாழக்கிழமை டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதுபோல், கொசு உற்பத்தியாகும் ஆதாரங்கள் அழிக்கப்பட்ட பகுதிகளில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்றார். 
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மாவட்ட இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சுந்தரராசு, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com