காஞ்சிபுரம் பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் : பொதுமக்கள் மகிழ்ச்சி

பாலாற்றில் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தைக் கண்டு காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
காஞ்சிபுரம் பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் : பொதுமக்கள் மகிழ்ச்சி

பாலாற்றில் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தைக் கண்டு காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கர்நாடகம், நந்தி மலையில் உற்பத்தியாகிறது பாலாறு. அங்கிருந்து கர்நாடகம், ஆந்திர மாநிலம் வழியாக சுமார் 140 கிமீ தொலைவு பாய்ந்து புல்லூர் வழியாக தமிழக எல்லையை வந்தடைகிறது. அதன்பிறகு, காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் வாயலூர் பகுதியில் வங்கக் கடலில் கலக்கிறது. 
கடந்த பல ஆண்டுகளாக பாலாறு வறண்டு கிடந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட கனமழையின்போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் விழாபோல் கொண்டாடினர். 
இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக மீண்டும் வறண்டது பாலாறு. தற்போது, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பாலாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பாலாற்று பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டாலும், அதைத்தாண்டி தமிழக வழிப்பாதைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. 
கடந்த சில நாள்களுக்கு முன்பு, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை, காவேரிபாக்கம் ஆகிய பகுதிகளைத் தாண்டி, காஞ்சிபுரம் எல்லையான பெரும்பாக்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வெள்ளநீர் வந்தது. இதனை, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை காலை நேரில் பார்வையிட்டார். 
தொடர்ந்து, பெரும்பாக்கம், விஷார், வெங்கடாபுரம் வழியாக செவிலிமேடு பகுதியை வந்தடைந்தது. இதனை, பொதுமக்களும், சிறுவர்களும் பார்த்துச் செல்கின்றனர். எனினும், வீணாகச் செல்லும் நீரைத் தேக்கி வைக்க தடுப்பணை இல்லையே என சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர். பாலாற்று வெள்ள நீரின் அளவை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com