திருவாலீஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

மதுராந்தகத்தை அடுத்த கூவத்தூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

மதுராந்தகத்தை அடுத்த கூவத்தூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
 பிரசித்தி பெற்ற புராதனமான இக் கோயிலில் கடந்த 10.9.2017 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 48 நாள்கள் மண்டல அபிஷேக பூஜை நடைபெற்றது . இதன் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை 108 சங்குகள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னர் அனைத்து சுவாமி சிலைகளுக்கும் சங்காபிஷேகத்தை கோயில் தலைமை அர்ச்சகர் ஜே.துரை சிவாச்சாரியார் செய்தார்.
 இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு மேளதாளம், வாண வேடிக்கைகளுடன், சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்திகள் வீதியுலா வந்தனர்.
 இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவர் கோதண்டராமன், தொழிலதிபர் ஜெ.ராமசந்திரன், செயல் அலுவலர் சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com