ஊனமாஞ்சேரி போலீஸ் அகாதெமியில் கருப்பு பூனைப் படைக்கு வரவேற்பு

தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் கருப்பு பூனைப்படை குழுவினருக்கு வண்டலூர் ஊனமாஞ்சேரியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. 
முதன்மை கமாண்டோ பிரதிஷ் ஆட்ரிக்கு நினைவுப் பரிசு வழங்கிய காவல்துறை அதிகாரிகள்
முதன்மை கமாண்டோ பிரதிஷ் ஆட்ரிக்கு நினைவுப் பரிசு வழங்கிய காவல்துறை அதிகாரிகள்

தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் கருப்பு பூனைப்படை குழுவினருக்கு வண்டலூர் ஊனமாஞ்சேரியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. 
தேசிய பாதுகாப்புப் படை என்ற கருப்பு பூனைப்படையானது இந்தியாவில் 16-10-1984-இல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்து தீவிரவாத சவால்களை எதிர்கொள்ளக்கூடிய உலகளவில் அதிரடிப்படையாக விளங்குகிறது. 
இந்நிலையில் கருப்புப் பூனைப் படையினர் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் இரு சக்கர வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இக்குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். 
இந்நிலையில் கருப்பு பூனை படைக் குழுத் தலைவர் அமீத்குமார் தலைமையில், 4 அதிகாரிகள், 3 துணை கமாண்டர்கள் உள்ளிட்ட 18 பேரும், 25 கமாண்டோக்களும் அடங்கிய குழுவினருக்கு ஊனமாஞ்சேரி போலீஸ் அகாதெமி சார்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஏடிஜிபி ஜாபர் சையத் சிறப்புரையாற்றினார். 
தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் பயிற்சி முதல்வர் எஸ்.பி. சாமுண்டீஸ்வரி வரவேற்றார். காவல்துறைத் தலைவர் அறிவுச்செல்வன், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முதன்மை கமாண்டோ பிரதிஷ் ஆட்ரி, பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியையொட்டி, நவீன ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு அதன் பயன்பாடுகள் குறித்து தமிழ்நாடு காவல் மற்றும் காவல்துறை பயிற்சி அதிகாரிகள், விஐடி கல்லூரி, தாகூர் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் தேசிய பாதுகாப்பு மாணவர் படையினருக்கும் கமாண்டோக்கள் விளக்கினர். 

 ஊனமாஞ்சேரி போலீஸ் அகாதெமிக்கு வருகை தந்த கருப்பு பூனைப் படையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com