கிராம வறுமை ஒழிப்பு: ஆலோசனைக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உத்தரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்பட்டு வந்தது. அதன்படி, கிராமப் பகுதிகளில் தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டு வீடுகள் மற்றும் கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளை பெற்று உரம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பணியாற்றும் தூய்மைக் காவலர்கள் கடந்த ஆண்டு வரை 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனர். 
தற்போதைய நிதியாண்டு முதல் மாநில நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன், ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 100 சதவீதம் கழிவறை அமைக்கப்பட்ட கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தினை போக்கிட பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கழிப்பறை கட்டாத ஊராட்சிகளில் கணக்கெடுப்பு நடத்தி விரைந்து கழிப்பறை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதோடு, திடக் கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். இதில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com