சோனியா பிறந்த நாள்: காங்கிரஸார் கொண்டாட்டம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸார் காஞ்சிபுரத்தில் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸார் காஞ்சிபுரத்தில் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.
 சோனியா காந்தியின் 72ஆவது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காஞ்சிபுரம் காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் ஜி.வி.மதியழகன் தலைமையிலும், நகர தலைவர் ராமநீராளன் உள்ளிட்டோர் முன்னிலையில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து, ஏழை எளியோருக்கு நல உதவிகளை வழங்கினர்.
 அதே போல், காந்தி சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஆர்.வி.குப்பன் தலைமையில் திரளான காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் மற்றும் நல உதவிகள் ஆகியவற்றை வழங்கிக் கொண்டாடினர். இதில், கட்சியின் மாவட்ட, நகர, வட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 செங்கல்பட்டில்....
 செங்கல்பட்டு, டிச. 9: செங்கல்பட்டு காங்கிரஸ் கட்சியினர் சோனியா காந்தியின் 72ஆவது பிறந்த நாளையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றதோடு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
 செங்கல்பட்டு நகர காங்கிரஸ் தலைவர் ஜே.பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் டி.ஜெயராமன், ரியாஸ் பாய், முருகன், ஆர்.குமரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மணிக்கூண்டு அருகில் உள்ள சித்திவிநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். இதையடுத்து, பொதுமக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com