திம்மசமுத்திரத்தில் இன்று  ஏகாம்பரநாதர் பார் வேட்டை உற்சவம்

காஞ்சிபுரத்தை அடுத்த திம்ம சமுத்திரத்தில் செவ்வாய்க்கிழமை ஏகாம்பரநாதர்  பார் வேட்டை உற்சவம் நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரத்தை அடுத்த திம்ம சமுத்திரத்தில் செவ்வாய்க்கிழமை ஏகாம்பரநாதர்  பார் வேட்டை உற்சவம் நடைபெறவுள்ளது.
 காணும் பொங்கல் தினமான ஜனவரி 16-ஆம் தேதி ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர், பார்வேட்டை உற்சவத்துக்காக திம்ம சமுத்திரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். 
அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு ஏகாம்பரநாதர் கோயிலில் வீற்றிருக்கும் விகடசக்ர விநாயகர், ஏகாம்பரநாதர் ஆகிய மூலவர்களுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.  தொடர்ந்து, காலை 8 மணிக்கு ஏகாம்பரநாதர் கோயிலிருந்து புறப்பட்டு திம்மசமுத்திரத்துக்கு செல்கிறார். 
  புறப்பாட்டுச் சேவையின் போது, வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், சிறப்பு நாகஸ்வரம், டமாரம், பேண்டு வாத்தியம், மாக்கோலம், அலங்கார குடை, கோலாட்டம், காவடியாட்டம், பம்பை, சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. 
தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு, உற்சவருக்கு 1008 லிட்டர் இளநீர், 27 லிட்டர் பன்னீர், 365 லிட்டர் பால், 108 லிட்டர் தயிர்,  27 லிட்டர் தேன், 27 வகையான மலர்கள், 9 வகையான திரவியங்கள்,  12 கிலோ சந்தனம், திருநீறு, 9 லிட்டர் எலுமிச்சை சாறு உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் ஏகாம்பரநாதருக்கு மகா அபிஷேகம் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள், ஆராதனை, பூஜைகள்  நடைபெறுகின்றன. 
இதையடுத்து மாலை புறப்பட்டு ஏகாம்பரநாதர் கோயிலுக்கு உற்சவர் வந்தடைவார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com