திருமலைவையாவூர் பெருமாள் கோயிலில் இடிந்த மண்டபம், சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா? சட்டப்பேரவையில் எம்எல்ஏ கேள்வி

திருமலை வையாவூர் பெருமாள் கோயில் பகுதியில் தொங்கு பாலம் போன்று அபாயகரமாக நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் முன்மண்டபம்

திருமலை வையாவூர் பெருமாள் கோயில் பகுதியில் தொங்கு பாலம் போன்று அபாயகரமாக நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் முன்மண்டபம், சுற்றுச்சுவர் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் மதுராந்தகம் எம்எல்ஏ நெல்லிகுப்பம் புகழேந்தி வலியுறுத்தினார்.        
 தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை புகழேந்தி பேசியதாவது:  மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள திருமலைவையாவூரில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூரிலிருந்து மதுராந்தகம் செல்லக்கூடிய வழியில் மேற்கு திசையில் இந்த கோயில் உள்ளது. அங்கே மலைப் பாதை இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ள சேதத்தினால் இந்த மலைப் பகுதி கோயில் முன்பிருந்த மண்டபம், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தொங்கு பாலம் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் அந்த  சுவர் இடிந்து விழுமோ தெரியாது. எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக அதனை நிவர்த்தி செய்து தர வேண்டும் என்றார்.
 இதற்கு தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பதிலளிக்கையில் இந்தக் கோயில் நூற்றாண்டு கால பழைமைவாய்ந்த கோயிலாகும். அந்த கோயிலை ஆய்வு செய்து, தொல்பொருள் துறையின் பரிந்துரையுடன், தமிழக முதல்வரின் ஆலோசனையைப் பெற்று பணி மேற்கொள்ளப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com