மாமல்லபுரத்தில்  பெண்களுக்கான கோலப் போட்டி

தமிழர் திருநாளை முன்னிட்டு மாமல்லபுரத்தில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும்  கலங்கரை மக்கள் நல சேவை சங்கத்தினர்

தமிழர் திருநாளை முன்னிட்டு மாமல்லபுரத்தில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும்  கலங்கரை மக்கள் நல சேவை சங்கத்தினர்  இணைந்து நடத்திய கோலப் போட்டியில்  நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். 
 10-வது ஆவது ஆண்டாக  ஞாயிற்றுக்கிழமை  மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் வளாகத்தில்  பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கு சைக்கிள் வாலி பால், பெண்களுக்கு கோலப் போட்டி, லெமன் அண்ட் ஸ்பூன், மியூசிக்கல் சேர்,  கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.  இந்நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டரணி பாதுகாப்புச் செயலாளர்  வீ.கிட்டு தலைமை வகித்தார். நகரச் செயலாளர் நவின் (எ) கதிரவன், சிந்தனை சிவா, இசிஆர் அன்பு வீர ராகவன், சாலமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.    
மாநில துணைச் செயலாளர் கரோலின்,  சூ.க.விடுதலைச் செழியன், கனல்விழி, காஞ்சி மகேஷ், மாமல்லபவன் மல்லை ஜனார்த்தனம் உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை 
நடத்தினர். 
 பல வண்ண கோலப் பொடிகளை கொண்டு பெண்களின் கைவண்ணத்தில் போடப்பட்ட கோலங்களை வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பலர் போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் 
மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com