சாண எரிவாயு பயிற்சி முகாம்

செங்கல்பட்டு கிராம மேம்பாட்டு சங்கம் மற்றும் காட்டுப்பாக்கம் அரசு வேளாண்மைத் துறை இணைந்து நடத்திய பெண்களுக்கான சாண எரிவாயு தயாரிப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை

செங்கல்பட்டு கிராம மேம்பாட்டு சங்கம் மற்றும் காட்டுப்பாக்கம் அரசு வேளாண்மைத் துறை இணைந்து நடத்திய பெண்களுக்கான சாண எரிவாயு தயாரிப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
செங்கல்பட்டு கிராம மேம்பாட்டு சங்கத்தின் இயக்குநர் பெஞ்சமின் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். காரிதாஸ் தொண்டு நிறுவன மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். காட்டுப்பாக்கம் வேளாண்மைத்துறை அலுவலர் நரேந்திரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது:
நாடு முழுவதும் சமையல் எரிவாயுவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், நகரம் மற்றும் கிராமங்களில் மாற்றுத் தொழில்நுட்பமான சாண எரிவாயுவிற்கு விவசாயிகள் மற்றும்பொதுமக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. மேலும் சாண எரிவாயுவின் பயன்பாடு பெருகும் வாய்ப்பு உள்ளது. 
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முன்னோடியாக வேளாண்மை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. சாண எரிவாயு தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் பரப்பிய பெருமை இந்தக் கல்வி நிலையத்தையே சேரும். இப்பயிற்சி முகாமில் பங்கேற்றவர்கள் இந்தத் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
இந்த முகாமில் காட்டுப்பாக்கம் வேளாண்மைத் துறை பொறியாளர் வேல்முருகன், செங்கல்பட்டு கிராமபுற மேம்பாட்டு சங்கம் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுவள்ளூர், வெப்பேடு, மேட்டுப்பாளையம், மேல்மணப்பாக்கம், வையாவூர் உள்ளிட்ட 17 கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். செங்கல்பட்டு கிராமப்புற மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com