வில்வராயநல்லூரில் நாட்டு நலத் திட்ட முகாம் தொடக்கம்

மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலத் திட்டத்தின் சார்பாக, வில்வராயநல்லூரில் சிறப்பு முகாம் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.


மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலத் திட்டத்தின் சார்பாக, வில்வராயநல்லூரில் சிறப்பு முகாம் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இப்பள்ளியின் நாட்டு நலத் திட்ட அலுவலர் டி.குமார் தலைமையில் 25 மாணவர்கள் விவ்வராயநல்லூரில் நாட்டு நலத்திட்ட சிறப்பு முகாமில் பல்வேறு பணிகளை செய்ய உள்ளனர். இதற்கான தொடக்க நிகழ்ச்சி அந்த கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நாட்டு நலத் திட்ட அலுவலர் டி.குமார் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் தூ.ப.வெங்கிடபெருமாள் முகாமில் தொடக்க உரை ஆற்றினார். வில்வராயநல்லூர் துரைசாமி பெருநோக்கு சமூக கல்வி மன்றத்தின் திட்ட அலுவலர் ராதிகா தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆர்.எழிலரசி, வி.கற்பகம், வி.கே.எம் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அரிகிருஷ்ணன், பள்ளியின் கல்விக் குழுத் தலைவர் கே.குமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் உமாமகேஸ்வரி, கருங்குழி லயன்ஸ் சங்கச் செயலர் டி.ஆர்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நலத் திட்டத்தின் துணை திட்ட அலுவலர் மதிமோகன் நன்றி கூறினார். இந்த முகாம் வரும் 30ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com