திருவண் ணாமலை, வேங்கிக்கால் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வாசகர் வட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியர் பலராமன் முன்னிலை வகித்தார். புதிய பார்வை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கிளை நூலகர் சரஸ்வதி, நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். இதைத் தொடர்ந்து, காமராஜரின் புகழ் குறித்து புலவர் கோவிந்தசாமி, வேதாத்திரி மகரிஷியின் மகிமைகள் குறித்து சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மனவளக்கலை மன்ற நிர்வாகி சந்திரசேகர், வருவாய்த் துறை ஊழியர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், திருவண்ணாமலை டவுன்ஹால் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார், ரூ.1,000 செலுத்தி நூலகப் புரவலராக இணைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.