ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

துடியலூர் அருகே உள்ள சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காளப்பநா யக்கன்பாளையம் மற்றும் ஆனைகட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

துடியலூர் அருகே உள்ள சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காளப்பநா யக்கன்பாளையம் மற்றும் ஆனைகட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினர் வி.சி ஆறுக்குட்டியின் பரிந்துரை யை ஏற்று இந்த இரு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தவுடன் சோமையம்பாளையம் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தகுமாரி நோயாளிக்கு மருத்துவப் பரிசோதனைசெய்து, மருத்துவமனைப் பணிகளைத் தொடங்கிவைத்தார்.

அதைத் தொடர்ந்து, ஆனைகட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மருத்துவப் பணி கள் தொடங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவர் வீரபாண்டி விஜயன், துணை தலைவர் ஆனந்தகுமார், டாக்டர்கள் சிவலிங்கம், சரண்யா, சுபாஷினி, மஞ்சுளா, மாலதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடி வேல், சுகாதார ஆய்வாளர்கள் பாஞ்சாலி, ராமராஜ், கவுன்சிலர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செட்டிபாளையத்தில்...: கோவை மாவட்டத்தில் செட்டிபாளையம், சோமையம்பாளையம், ஆனைகட்டி பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை காணொலிக்காட்சி மூலமாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முதல்வர் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.

இதையடுத்து, செட்டிபாளையம் பேரூராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், கஞ்சம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் 30 படுக்கைகள் வசதி கொண்ட அறைகளும், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை நிலையம் என அனைத்து வகையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இது தொடங்கப்பட்டுள்ளது. இப்பகுதி பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com