ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தேயிலை தோட்டத் தொழிலாலர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஊதிய ஒப்பந்தத்துக்கு மேல் ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக நடைபெற இருந்த பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேயிலை தோட்டத் தொழிலாலர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஊதிய ஒப்பந்தத்துக்கு மேல் ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக நடைபெற இருந்த பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வால்பாறை  பகுதி தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ. 294 -ஆக நிர்ணயம் செய்து, தோட்ட அதிபர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினரிடையே கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த  ஒப்பந்தத்துக்கு வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு உள்பட அதிமுக கட்சி நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், இந்த ஒப்பந்தத்துக்கும் அதிகமாக தினக்கூலியாக ரூ. 315 பெற்றுத்தரப்படும் என்று கூறி சென்னையில், அமைச்சர் முன்னிலையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் பறிக்கும் இலைக்கு கூடுதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கான புதிய ஒப்பந்தம் தோட்ட அதிபர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினரிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினக்கூலி வழங்க நிர்வாகம் முன்வரவில்லை எனில், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சட்டப் பேரவை உறுப்பினரும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 9,10-ஆம் தேதிகளிலும், சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பேச்சுவார்த்தை நடைபெறும் தேதியும் அறிவிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com