வ.உ.சி. உயிரியல் பூங்கா இயக்குநராக மருத்துவர் செந்தில்நாதன் நியமனம்

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் புதிய இயக்குநராக கால்நடை மருத்துவர் செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் புதிய இயக்குநராக கால்நடை மருத்துவர் செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவில் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன என 894 விலங்கினங்கள் பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூங்காவுக்கு இயக்குநராக கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.
 அவர்கள் விலங்குகளைப் பராமரித்து சிகிச்சை அளிப்பார். இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பூங்கா இயக்குநர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருந்துவந்தது. இதனால், பூங்காவில் வளர்க்கப்பட்ட பல விலங்குகள் சிகிச்சையின்றி பாதிக்கப்பட்டு இருந்தன. போதிய நிதிப் பற்றாக் குறை காரணமாக பூங்காவை நிர்வகிக்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வந்தது. இதையடுத்து, பூங்காவை மேம்படுத்த செயல் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக கைவிடப்பட்டது.
 இந்நிலையில், பொலிவுறு திட்டத்தின்கீழ் நிதியைப் பெற்ற பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, பொள்ளாச்சியில் பணியாற்றி வந்த கால்நடை மருத்துவர் செந்தில்நாதன் வ.உ.சி. உயிரியல் பூங்கா இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com