ஆக்கிரமிக்கப்பட்ட 1.47 ஏக்கர் மாநகராட்சி நிலம் மீட்பு

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 1.47 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 1.47 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 33-ஆவது வார்டு, காளப்பட்டி, அசோகா நகர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 23.43 சென்ட் நிலம் இடம், மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 16-ஆவது வார்டு, வடவள்ளி,
ஜி.பி.கார்டன் பகுதியில் உள்ள 13.68 சென்ட் நிலம், வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 43-ஆவது வார்டு, வெள்ளக்கிணறு, அதிர்ஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள 75.70 சென்ட் நிலம், தெற்கு
மண்டலத்துக்கு உள்பட்ட 87-ஆவது வார்டு, குனியமுத்தூர், பாரதி நகர் பகுதியில் உள்ள 6 சென்ட் இடம், மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட 48-ஆவது வார்டு, கணபதி, செல்வகுமாரசாமி நகர் பகுதியில் உள்ள 28 சென்ட் நிலம் என மொத்தமாக 1.47 ஏக்கர் பரப்பளவிலான ஆக்கிரமிப்பு நிலங்களை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com