வேதியியல் திறனறிப் பயிலரங்கு: பாரதியார் பல்கலை. வெற்றி

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை, அறிவியல் கல்லூரியில் செம்ப்யூஷன் எனும் தலைப்பில் வேதியியல் திறனறிப் பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை, அறிவியல் கல்லூரியில் செம்ப்யூஷன் எனும் தலைப்பில் வேதியியல் திறனறிப் பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் வேதியியல் துறை சார்பில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வி.பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.
கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் கருணாகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விழாவைத் தொடக்கிவைத்தார். தொடர்ந்து, இதில் பங்கேற்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கிடையே வேதியியல் சார்ந்த கலை, விளையாட்டு, அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
முதுகலைப் பிரிவில் பாரதியார் பல்கலைக்கழகமும், இளநிலைப் பிரிவில் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியும் சாம்பியன் பட்டங்களை வென்றன. பரிசளிப்பு விழாவுக்கு வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்து கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். உதவிப் பேராசிரியர் ஏ.முத்துசாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com