கோவையில் இணைய வழியில் கீரைகள் விற்பனை அறிமுகம்

கோவையில் கீரைக்கடை.காம் என்ற இணையதள வழியாக கீரைகள் விற்பனை புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் இணைய வழியில் கீரைகள் விற்பனை அறிமுகம்

கோவையில் கீரைக்கடை.காம் என்ற இணையதள வழியாக கீரைகள் விற்பனை புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இணையதளத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஸ்ரீராம் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை,  சாய்பாபா காலனியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கீரை விற்பனை மையத்தில் எங்களது சொந்த பண்ணை மற்றும் இருகூர்,  சிட்ரா, தொண்டாமுத்தூர்,  பொள்ளாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து கீரை வகைகள் நேரடியாக கொள்முதல் விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனைக்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக கீரைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக் கொண்டுவரப்படுகிறது. இந்தக் கீரைகள் இயற்கை உரங்களைக் கொண்டு வளர்க்கப்படுகிறது. எங்களது கடையில் 40 வகையான கீரை வகைகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும் மதியம் கீரை பொறியலும், மாலையில் கீரை சூப் வகைகளும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். விவசாயிகள் ஆன்-லைன் மூலம் விற்பனை செய்ய வசதியாக இரண்டு ஆண்டுகள் ஆய்வு நடத்தி புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளாம். 
காலை 9 முதல் 11 மணி வரை எங்களது செயலிகள் மூலம் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யலாம். இதில் முன்கூட்டியே ஆர்டர் செய்தால் புதிய வகை கீரைகளை பெறலாம். இதற்காக கீரைக்கடை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கீரையின் மருத்துவ குணங்கள் குறித்து எங்களது செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். கோவை மாநகரில் அனைத்து பகுதிகளிலும், சென்னை மற்றும் பெங்களூரு மற்றும் பிற நகரங்களிலும் எங்கள் நிறுவன கிளைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com