மேம்பாலம் கட்டும் பணி: ஆவாரம்பாளையம் ரயில்வே கேட் இன்றுமுதல் மூடல்

கோவை ஆவாரம்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (டிசம்பர் 7) முதல் ரயில்வே கேட் மூடப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கோவை ஆவாரம்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (டிசம்பர் 7) முதல் ரயில்வே கேட் மூடப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
கோவை,  ஆவாரம்பாளையத்தில் மேம்பாலம்  கட்டுவதற்கு 2009- ஆம் ஆண்டிலேயே ரூ.22.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,  2011-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த இடத்தில் ரூ. 5.50 கோடிக்கு ரயில்வே இணைப்புப் பாலம் கட்டப்படும் என்றும் இதையடுத்து மொத்தம் 579 மீட்டர் நீளம்,  12 மீட்டர் அகலத்தில் பாலமும்,  கணபதி - ஆவாரம்பாளையம் மார்க்கத்தில் தலா 16.60 மீட்டர் அகலத்தில் அணுகு சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பல்வேறு காரணங்களால் இந்தப் பணிகள் தொடங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர், தொழில் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 
இதனிடையே ஆவாரம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணியைத் தொடங்க ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டனர். இந்தப் பணிகளுக்காக  வியாழக்கிழமைமுதல் ஆவாரம்பாளையம் ரயில்வே கேட் மூடப்பட உள்ளது. ஆகவே,  வாகன ஓட்டிகள் சத்தி சாலை மற்றும் புது சித்தாபுதூர் சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை 2018  செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com