ரெட்மி 5ஏ புதிய செல்லிடப்பேசி அறிமுகம்

ஜியோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ரெட்மி 5 ஏ செல்லிடப்பேசி கோவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜியோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ரெட்மி 5 ஏ செல்லிடப்பேசி கோவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த புதிய செல்லிடப்பேசியை ஜியோமி நிறுவனத்தின் தெற்கு மற்றும் கிழக்கு பிராந்திய தலைவர் சுனில் பேபி அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜியோமி நிறுவனத்தின் சார்பில் ரூ. 4, 999 என்ற சலுகை விலையில் ரெட்மி 5ஏ செல்லிடப்பேசி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்லிடப்பேசி ஆன்-லைன் முறையில் விற்பனை செய்யப்படவுள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ரெட்மி 5ஏ செல்லிடப்பேசியில் குவால்காம்,  ஸ்னாப் டிராகன்,  425 குவாட் கோர் பிராசசர் மற்றும் 128 ஜிபி வரை விரிவாக்கம் செய்யக் கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
 16 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட செல்லிடப்பேசி ரூ. 5,999-க்கும்,  32 ஜிபி வரையில் சேமிப்பு திறன் கொண்ட செல்லிடப்பேசி ரூ. 6,999-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சலுகை விலையாக முதல் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு 16 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட செல்லிடப்பேசி ரூ. 4,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 செல்லிடப்பேசி சந்தையில் 23.5 சதவீதம் பங்களிப்புடன் ஒரு காலாண்டில் 92 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்று ஜியோமி நிறுவனம் 300 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. செல்லிடப்பேசி விற்பனையில் மட்டுமின்றி பவர் பேங்க் விற்பனையிலும் எம்ஐ தயாரிப்புகள் முன்னிலை வகித்து வருகிறது.
"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின்கீழ் நொய்டாவில் 3-ஆவது புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.  ஆன்-லைனில் மட்டுமே  எம்ஐ, ரெட்மி செல்லிடப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  தற்போது இந்தியா முழுவதும் 15 நகரங்களில் பிரத்யேக நேரடி விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கோவையிலும் பிரத்யேக விற்பனை மையம் திறக்கப்படவுள்ளது என்றார்.  
வேகமாக விற்பனை ஆகி வரும் எம்ஐ ஏ1 செல்லிடப்பேசி ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் டிசம்பர் 7 முதல் 9-ஆம் தேதி வரையில் பிளிப்கார்ட் ஆன்-லைன் வர்த்தக நிறுவனத்தின் மூலம் ரூ. 2 ஆயிரம் சலுகையில் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com