டி.என்.பி.எஸ்.சி. திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை, தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் மு.வ.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.
அப்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் உள்ள அரசுப் பணிக்காக நடத்தப்படும் தேர்வுகளில் பங்கெடுக்கலாம். முன்னர், தனித்தனியாக நடத்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 4 தேர்வுகளை தற்போது ஒரே தேர்வாக நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதைத் கைவிடவேண்டும். மேலும், தேர்வாணையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் வெ.வசந்தகுமார், பொருளாளர் என்.ஜீவானந்தம், மாநிலக் குழு உறுப்பினர் பி.ஆர்.வேலு, மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் என்.கணேசமூர்த்தி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் மெள.குணசேகர், மாவட்டத் தலைவர் பூர்ணிமா நந்தினி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com