தனியார் பள்ளியில் 2 குழந்தைகள் நீக்கம்: குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 30-இல் விசாரணை

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் இட ஒதுக்கீடு கோரி அதிகாரிகளிடம் மனு அளித்த 2 பெற்றோர்களின் 2 குழந்தைகள் பள்ளியில்

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் இட ஒதுக்கீடு கோரி அதிகாரிகளிடம் மனு அளித்த 2 பெற்றோர்களின் 2 குழந்தைகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை நடைபெற்று வருகிறது.
 கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமாரின் மகளும், நல்லாம்பாளையம் ரங்கா லே-அவுட் பகுதியைச் சேர்ந்த தெüலத் பாஷாவின் மகனும் நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி பயின்று வந்தனர்.
 இந்நிலையில், 2017-18 ஆம் கல்வியாண்டில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அருகமை பெற்றோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் எல்.கே.ஜி. இடத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். மேலும், அந்த பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும் என்று இந்த 2 குழந்தைகளின் பெற்றோர் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர்.
 இது குறித்து தெரிய வந்ததும், பள்ளி நிர்வாகம் அந்த இரு குழந்தைகளையும் பள்ளியில் இருந்து நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த 2 குழந்தைகளின் பெற்றோரும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் கடந்த 12-ஆம் தேதி புகார் தெரிவித்திருந்தனர். மேலும், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் புகார் அனுப்பியிருந்தனர்.
 இந்நிலையில், இந்தப் புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆணையத்தின் தலைவர் எம்.பி.நிர்மலா, சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகியையும், புகார் அளித்த 2 குழந்தைகளின் பெற்றோரையும் வரும் 30-ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com