நீர்நிலைகளைப் பாதுகாக்க பள்ளிகளில் பிரசாரம்: குளங்கள் பாதுகாப்பு அமைப்பு முடிவு

கோவையில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கும் முயற்சியாக, பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என

கோவையில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கும் முயற்சியாக, பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது.
 கோவையில் உள்ள குளங்கள், நீர்நிலைகளை சுத்தம் செய்து, நீர்ப்பிடிப்பு பகுதிகளைச் சீரமைக்கும் களப் பணியை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கடந்த 20 வாரங்களாக மேற்கொண்டு வருகிறது. இதுவரை பேரூர் பெரிய குளம், செல்வசிந்தாமணி குளம், வெள்ளலூர் ராஜவாய்க்கால், வெள்ளலூர் குளம், குனியமுத்தூர் நீர்வழிப் பாதை, செங்குளம், சுண்டக்காமுத்தூர் பழைய கிணறு, தேவி சிறை எனும் கோயம்புத்தூர் அணைக்கட்டு ஆகியவை சீரமைக்கப்பட்டுள்ளன.
 இந்நிலையில், 20 வார களப்பணியில் பங்கேற்றவர்கள், நிதியுதவி செய்தவர்களுக்கான பாராட்டு, நன்றி தெரிவிக்கும் விழா சுந்தராபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஆர்.மணிகண்டன், சுரேஷ் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் நிர்வாகி ஆர்.ரவீந்திரன், சிறுதுளி அமைப்பின் மணியன், கெüசிகா நதி பாதுகாப்புக் குழுவின் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நீர்நிலை சீரமைப்பில் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
 இதில், கோவை குளங்கள், நொய்யலைத் தூய்மையாக வைத்திருப்பதற்காக, அதில் குப்பைகளைக் கொட்டக் கூடாது என்பதை மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளிக் குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்துவது, இணையதளம் உருவாக்குவது, கள ஆய்வுக்கு அழைத்துச் செல்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குளங்கள் சீரமைப்புக்கு உதவி செய்து வரும் ஆனந்தாஸ், நமது கோவை நமது பசுமை, டெக்சாஸ் தமிழ் பவுண்டேஷன், கேமரோன், வி.கே.சி., சார்க், டெஸ்லீட், தமிழா அறக்கட்டளை போன்ற நிறுவனங்களுக்கும், கத்தாரைச் சேர்ந்த அசோக் மணிலால் காந்தி, சிங்கப்பூர் சிவகுமார் உள்ளிட்ட தனி நபர்கள், களப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com