காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக். பள்ளி 28-வது ஆண்டாக 100% தேர்ச்சி

காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 28-ஆவது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 28-ஆவது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 135 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவி வி.சரண்யா 494 மதிப்பெண்களும், மாணவி டி.தன்யா 493 மதிப்பெண்களும், ஆர்.பிரீத்தா 492 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
மாணவி சரண்யா தமிழில் 97, ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மேலும், கணிதத்தில் 8 பேரும், அறிவியலில் 8 பேரும், சமூக அறிவியலில் 5 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும், 490-க்கு மேல் 5 பேரும், 480-க்கு மேல் 15 பேரும், 450-க்கு மேல் 46 பேரும் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளைப் பள்ளித் தாளாளர் வி.ராமகிருஷ்ணன், செயலர் ஜெயகண்ணன், முதல்வர் லூசி தங்கராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com