அமித் ஷா மகன் விவகாரம்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி தொடர்பாக விசாரணை அமைக்கக் கோரி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி தொடர்பாக விசாரணை அமைக்கக் கோரி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமை வகித்தார்.
இதில்,  பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனம் 2014-இல் தொடங்கப்பட்டது.
முதல் ஆண்டில் நஷ்டத்தையும்,  இரண்டாவது ஆண்டில் ரூ. 50 ஆயிரம் மட்டுமே லாபம் ஈட்டியது.  ஆனால்,  மூன்றாவது ஆண்டில் அவரது நிறுவனம் சுமார் ரூ. 80 கோடியே 50 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக  உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 4 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சியும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 ஆனால், அமித் ஷாவின் மகனுக்குச் சொந்தமான நிறுவனத்தின் வருவாய் மட்டும் எவ்வாறு 16 ஆயிரம் மடங்கு உயர்ந்தது? பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் பயன்படுத்தி பாஜகவினர் பயனடைந்துள்ளனர். எனவே,  இது குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில்,  சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, மாவட்ட முன்னாள் தலைவர் மகேஷ்குமார், பொதுச் செயலாளர் வீணஸ் மணி,  நிர்வாகிகள் சரவணகுமார், சௌந்தரகுமார், வழக்குரைஞர் கருப்பசாமி, திலகவதி, மணிகண்டன் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com