டாடா நெக்ஸான் கார் அறிமுகம்

டாடா நிறுவனத்தின் எஸ்.யு.வி. ரக நெக்ஸான் கார் கோவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

டாடா நிறுவனத்தின் எஸ்.யு.வி. ரக நெக்ஸான் கார் கோவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
எஸ்.ஆர்.டி. டாடா விற்பனை நிறுவனத்தில் நடைபெற்ற இந்த கார் அறிமுக விழாவில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.சக்திவேல், மேலாளர் (விற்பனை) சதீஷ், டாடா நிறுவனப் பிரதிநிதி ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கார் குறித்து சக்திவேல் கூறியதாவது:
நெக்ஸ்ட் ஆன் என்பதின் சுருக்கமாக நெக்ஸான் என்று அழைக்கப்படும் இந்த கார்களின் என்ஜின்கள் புணேயில் உள்ள டாடா தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டவை.  உதிரி பாகங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஏ.வி.எல். பாஷ்,  மஹாலி,  ஹனிவெல் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
நெக்ஸானில் பெட்ரோலில் இயங்கக் கூடிய 5 மாடல்களும், டீசலில் இயங்கக் கூடிய 5 மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டீசல் காரின் என்ஜின் 1,486 சி.சி. திறன் கொண்டது. 4 சிலிண்டர்கள், அதிகபட்ச பவர் 110 பி.எஸ்., அதிகபட்ச டார்க் 260 என்.எம். கொண்டது.
பெட்ரோல் காரின் என்ஜின் 1,198 சி.சி. திறன் கொண்டது. இதில்,  3 சிலிண்டர்கள் உள்ளன. அதிகபட்ச பவர் 110 பி.எஸ்.ஸும், அதிகபட்ச டார்க் 170 என்.எம். கொண்டது. முன்பக்கத்தில் 6 கியர்களும், பின்பக்கம் ஒரு கியரும் கொண்ட இந்த கார்கள் அதிகபட்சம் லிட்டருக்கு (பெட்ரோல் ) 17 கி.மீட்டரும், டீசலுக்கு 21 கி.மீட்டரும் மைலேஜ் தரவல்லது. பெட்ரோல் கார் ரூ. 7.06 லட்சம் முதலும், டீசல் கார் ரூ. 8.20 லட்சம் முதலும் விற்பனை செய்யப்படுகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com