ஊதிய உயர்வு அறிவிப்பு: பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றம்

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தினர் கூறியதாவது:
அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த ஊதிய உயர்வில் பகுதி நேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளவில்லை.
திருத்தி அமைக்கப்பட்ட அகவிலைப்படி பகுதி நேர அலுவலர்களுக்கு அனுமதிக்கத்தக்கது அல்ல என்று அரசு கூறியிருப்பதன் மூலம் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். கடந்த 2011-இல் நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் தற்போது வரை ரூ. 7,700 மட்டுமே ஊதியம் பெற்று வருகின்றனர.  
தமிழக அரசு எங்களிள் நிலை குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com