ஏவிபி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில்  கொடுத்து மகிழும் வாரம்

நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த தெற்குபாளையத்தில் உள்ள ஏவிபி மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் கொடுத்து மகிழும் வாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த தெற்குபாளையத்தில் உள்ள ஏவிபி மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் கொடுத்து மகிழும் வாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாணவர்களிடையே ஈகை மனப்பான்மையினை உருவாக்கும் விதத்தில் கொடுத்து மகிழும் வாரம் நடத்தப்பட்டு வருகிறது. ஏவிபி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பள்ளித்  தாளாளர் வெங்கடேஷ்வரன் தொடக்கிவைத்தார்.
இதில் மாணவ,  மாணவிகள் பல்வேறு சித்திரங்களை வரைந்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று வழங்கினர். மேலும், மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை சுமார் 300 கிலோ அளவுக்கு சேகரித்து  ஆதவற்றோர் இல்லங்களுக்கு வழங்கினர். தெற்குபாளையம் கிராமத்தில் வசிக்கும் எழுத்தறிவற்ற முதியோர்களைத் சந்தித்து பயிற்றுவிக்க கணக்கெடுப்பு நடத்தினர்.
அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு சென்று கல்விச் சிறப்பை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். அருகிலுள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டனர். இதில் கல்விப் பிரிவு
இயக்குநர்கள் சண்முகம், தமிழ்வாணன், சுப்பிரமணியம், முதல்வர் சுப்புலட்சுமி, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com