பெருங்குடல், மலக்குடல் சிகிச்சை நிபுணர்கள் மாநாடு கோவையில் தொடக்கம்

கோவையில் பெருங்குடல், மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் 3 நாள் தேசிய மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோவையில் பெருங்குடல், மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் 3 நாள் தேசிய மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து, அகில இந்திய பெருங்குடல், மலக்குடல் சிறப்பு மருத்துவர்கள் அமைப்பின் தேசியத் தலைவர் சிவா கே.மிஸ்ரா, ஜெம் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொதுவாக உணவுப் பழக்க முறை காரணமாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெருங்குடல், மலக்குடல் புற்றுநோயால் முன்னர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இவ்வகை பாதிப்புகளால் இந்தியர்கள் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்து வருவது போன்ற காரணங்களால் பெருங்குடல், மலக்குடல், உணவுக் குழாய், இரைப்பை புற்றுநோய் பாதிப்புகளுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புற்றுநோய் பாதிப்புக்கு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் 65 சதவீதம் பேர் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். லாப்பிராஸ்கோப்பி, ரோபோடிக் போன்ற நவீன அறுவை சிகிச்சை மூலமாக பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
பெருங்குடல், மலக்குடல், மூலம், பௌத்திரம் ஆகிய உடல் உறுப்பு பாதிப்புகளுக்கு மேற்கொள்ளப்படும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து மூன்று நாள் கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும் ஜெம் மருத்துவமனையில் இருந்து இவ்வகை பாதிப்புகளுக்கு லாப்பிராஸ்கோப்பி, ரோபோடிக் முறையில் மேற்கொள்ளப்படும் நவீன அறுவை சிகிச்சை குறித்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இக்கருத்தரங்கில் வங்கதேசம், இலங்கை, தென்கொரியா, ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com