அண்ணா விருதுக்கு கோவை காவல் ஆய்வாளர் தேர்வு

தமிழக அரசின் அண்ணா விருதுக்கு கோவை மாநகரக் காவல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் டி.ஹெச்.கணேஷ் (44) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் அண்ணா விருதுக்கு கோவை மாநகரக் காவல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் டி.ஹெச்.கணேஷ் (44) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் காவல் துறையினருக்கு அண்ணா பிறந்த நாளையொட்டி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அண்ணா விருது 128 காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கோவை மாநகரக் காவல் துறைக்கு உள்பட்ட குனியமுத்தூர் காவல் நிலையத்தில் (சட்டம்-ஒழுங்கு) ஆய்வாளராகப் பணியாற்றி வரும் டி.ஹெச்.கணேஷ் அண்ணா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர் மற்றும் மாவட்டக் காவல் துறையில் இருந்து இந்த விருதுக்கு இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டி.ஹெச்.கணேஷ் உதகையை அடுத்த தாவணி பகுதியைச் சேர்ந்தவராவார். கடந்த 1997-ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்து 2008-இல் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றார். கோவை, வெரைட்டி ஹால் சாலை காவல் நிலையத்தில் 2013-ஆம் ஆண்டு ஆய்வாளராகப் பணியாற்றியபோது விடுதியில் தங்கியிருந்த நகை வியாபாரியிடம் 8 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com