காஷ்மீர் சிறுமி படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் 8 வயது சிறுமி படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

காஷ்மீரில் 8 வயது சிறுமி படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
கோவை,  தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் ஏ.எல்.ஜமால் முகமது தலைமை வகித்தார். இதில், காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், அந்த அமைப்பின் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் முகமது அலி உள்பட திரளானோர் பங்கேற்றனர்.   
 வழக்குரைஞர்கள்
 ஆர்ப்பாட்டம்: 
மேலும் இதேகோரிக்கையை வலியுறுத்தி கோவை, ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தை திருத்தம் செய்யக்கூடாது. 
சிறுமி கொலை குறித்து கோவை அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவி  பிரியாவை எவ்விதமான நிபந்தனையும் இல்லாமல் மீண்டும் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com