பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட அனைத்து

கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கமானது ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் பள்ளி செல்லாமல் உள்ள குழந்தைகள், பள்ளி இடைநின்ற குழந்தைகள், மாற்றுத் திறன் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டுள்ளது. 
அதன் அடிப்படையில் கோவை மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பெல்ராஜ் மேற்பார்வையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாரங்களில் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தைப் பொருத்தவரை 9 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் துடியலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் முதலில் திங்கள்கிழமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் த.பிளாரன்ஸ் தலைமையில் நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பாலமலை ஆதிவாசி கிராமங்களில் கணக்கெடுப்பு தொடங்கியது. 
ஆசிரியப் பயிற்றுநர்கள் தமிழ்ச்செல்வி, வளர்மதி, ஜாஸ்மின், வித்யா, ரேணுகா, சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் தேன்மொழி, ஆர்த்தி, யுவராணி மற்றும் பிசியோதெரபிஸ்ட் மதன்கோபால் ஆகியோர் பெருக்கை பதி, பெரும்பதி, மாங்குழி, பசுமணிப்புதூர் போன்ற கிராமங்களில் கண்கெடுப்பு நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com