பிஏபி கிளைக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர்

வடசித்தூர் கிளைக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் விரயமானது.

வடசித்தூர் கிளைக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் விரயமானது.
  வடசித்தூர் பிஏபி கிளைக் கால்வாயில் மன்றாம்பாளையம் அருகே 15 அடி உயரம் 400 மீட்டர் நீளம் கொண்ட நீர் வழிப் பாலம் உள்ளது.  இந்தக் கால்வாயின் மூலமாக குருநல்லிபாளையம், மெட்டுவாவி, மன்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விளைநிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்தக் கால்வாயில் மன்றாம்பாளையம் அருகே உள்ள பாலத்தில் பல இடங்களில் நீர்க் கசிவு ஏற்பட்டு தண்ணீர் விரையம் ஏற்பட்டு வந்தது.
 விவசாயிகள் நீர் வழிப் பாலத்தில் கால்வாய் உடைந்துவிடும் என்ற கவலையில் இருந்து வந்தனர். பிஏபி அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்து இருந்தனர்.
  இந்நிலையில், கால்வாய் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.  உடைப்பை சரி செய்ய இன்னும் சில நாள்கள் ஆகும் என்பதால் விவசாயிகளுக்கு கால்வாய் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.  கால்வாய் பாலத்தில் ஏற்பட்ட கசிவுகளை முன்கூட்டியே சரிசெய்திருந்தால் தற்போது உடைப்பு ஏற்பட்டிருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com