மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு துவக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-ஆவது மாவட்ட மாநாடு, கோவை மணியகாரன்பாளையத்தில் உள்ள கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-ஆவது மாவட்ட மாநாடு, கோவை மணியகாரன்பாளையத்தில் உள்ள கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.
 தொடக்க நிகழ்ச்சியில், சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு ஜோதியை சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபனிடம் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே.சி.கருணாகரன் வழங்கினார்.
 இதே போல, ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் ஜோதியை மாதர் சங்க நிர்வாகி அ.ராதிகாவிடம் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி வழங்கினார்.
 மேலும், கணபதிபுதூரில் இருந்து கே.ரமணி,  எம்.பூபதி, டி.பாலன், எம்.நஞ்சப்பன், ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் நினைவாக கொண்டுவரப்பட்ட கொடிக் கம்பத்தை வி.பெருமாள் கொடுக்க யு.கே.சிவஞானம் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, மாநாட்டுக் கொடியை எஸ்.ஆறுமுகம் ஏற்றினார்.
 இதில், கோவை மண்ணில் செங்கொடியின் வேர்கள் என்ற நூலை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சௌந்தரராஜன் வெளியிட, வாலிபர் சங்கப் பிரதிநிதி கே.எஸ்.கனகராஜ், மாணவர் அமைப்புப் பிரதிநிதி பி.பிரபாகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
 இதைத் தொடர்ந்து, கட்சியின் முன்னணி ஊழியராக இருந்து மறைந்த வி.முத்துசாமியின் மகள் கல்வி உதவித் தொகையாக ரூ.2 லட்சத்தை  முத்துசாமி குடும்பத்தாரிடம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் வழங்கினார்.
 மேலும், வெள்ளலூர் வீரமணி இசையமைத்து பாடியுள்ள ஒலிப்பேழை வெளியிடப்பட்டது.
 மாநாட்டுக்கு பி.ஆர்.நடராஜன், சி.பத்மநாபன், எஸ்.அமுதா ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகி வி.சுரேஷ் வரவேற்றார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சௌந்தரராஜன் சிறப்புரையாற்றினார்.
 இதைத் தொடர்ந்து, வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி முன்வைத்தார். மாநாட்டின் நிறைவு நாளான புதன்கிழமை, கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் நிறைவுரையாற்றுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com