"மாணவர்களை வெற்றியாளர்களாக உருவாக்கவேண்டியது ஆசிரியர்களே'

தங்களிடம் படிக்கும் மாணவர்களின் திறமைகளை அறிந்து அவர்களை வெற்றியாளர்களாக உருவாக்கவேண்டியது ஆசிரியர்களின் கடமை என்று காவல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி

தங்களிடம் படிக்கும் மாணவர்களின் திறமைகளை அறிந்து அவர்களை வெற்றியாளர்களாக உருவாக்கவேண்டியது ஆசிரியர்களின் கடமை என்று காவல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி பேசினார்.
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த மத்தம்பாளையத்தில் உள்ள அக்ஷரம் சர்வதேசப் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவர் கே.பழனிசாமி தலைமை வகித்தார். தாளாளர் ஏ.சிவகுமார் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் ரமேஷ் வரவேற்றார். முதல்வர் பப்பிராய் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:
கல்வி என்பது ஒரு உந்துசக்தியாகும். அது மனிதனுக்கு அவசியமான ஒன்று.புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், அண்ணாதுரை போன்றோர் தாங்கள் கற்றதை மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தினார்கள். அதுபோல் இன்றைய மாணவர்களும் நன்கு கல்வி கற்று தானும் உயர்ந்து இந்த நாட்டினையும் வளப்படுத்தவேண்டும். போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் திறமைகள் இல்லையெனில் உயர்ந்த நிலைக்கு வருவது கடினம். தங்களிடம் படிக்கும் மாணவர்களின் திறமைகளை அறிந்து அவர்களை வெற்றியாளர்களாக உருவாக்கவேண்டியது ஆசிரியர்களின் கடமை என்றார்.
தொடர்ந்து கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு அவர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து பள்ளியின் ஆண்டுமலரை அவர் வெளியிட்டார்.
விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி ஐ.கார்த்திகா நன்றி கூறினார். விழாவில் பள்ளியின் இயக்குநர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com