ராமகிருஷ்ணா கல்லூரியில் கருத்தரங்கு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
இதில், எஸ்.என்.ஆர். அறநிலையத்தின் தலைமை வணிக அதிகாரி சுவாதி ரோஹித் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக உலகின் இளம் செயற்கை நுண்ணறிவு நிபுணராகவும், மிகக் குறைந்த வயதில் செல்லிடப்பேசி செயலியை உருவாக்கியவருமான தன்மய் பக்ஷி பங்கேற்றார்.
எஸ்.என்.ஆர். அறநிலையத்தின் கல்வி இயக்குநர் எபிநேசர் ஜெயகுமார், இளம் ஆராய்ச்சியாளருக்குப் பாராட்டுரை வாசித்தார். 
இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் கி.சித்ரா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com