மேட்டுப்பாளையம் அரசு கலைக் கல்லூரியில்  சேர மாணவர்களுக்கு அழைப்பு

மேட்டுப்பாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில், இளங்கலை 5 பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள 127 இடங்களில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில், இளங்கலை 5 பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள 127 இடங்களில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) சுகுமாரன் கூறியதாவது:  
இப்பகுதியில் இதுவரை கலை, அறிவியல் பட்டப் படிப்புத் தேவைகளுக்கு கோவை அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று வந்த ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 2016 முதல் மேட்டுப்பாளையம் பகுதியில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. 
தற்போது இங்கு பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. பொருளாதாரம், பி.காம்., பி.காம். சி.ஏ., பி.எஸ்.சி. கணிதம் ஆகிய 5 இளங்கலை பாடப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. 
ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் 60 பேர் என 5 பாடப் பிரிவுகளுக்கு 300 பேர் சேர்க்கப்பட வேண்டும். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மாணவர்களிடமிருந்து 380 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 
அதைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வுக்குப் பின்னர் அனைத்து பாடப் பிரிவுகளிலும் 170 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 
இதனால், பி.ஏ.ஆங்கிலத்தில் 30, பொருளாதாரத்தில் 20, பி.காம் பிரிவில் 10, பி.காம் சி.ஏ. பிரிவில் 22, பி.எஸ்.சி. கணிதத்தில் 45 என மொத்தம் 127 இடங்கள் காலியாக உள்ளன.
 எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இப்பகுதியில் இன்னும் கல்லூரியில் சேராத ஏழை, எளிய,  நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மேற் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் குறைந்த கட்டணத்தில் சேர்ந்து பட்டதாரிகளாக உருவாகவேண்டும்.  
இக்கல்லூரிக்கு மேட்டுப்பாளையம், குட்டையூர் அருகே புதிய கல்லூரிக்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதால், தற்போது காரமடை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலேயே தற்காலிகமாக கல்லூரி செயல்பட்டு வருகிறது. 
இந்த ஆண்டின் 3-ஆம் வருட மாணவர்களுக்கு ஜூன் 18-ஆம் தேதியும், புதிதாகச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 2-ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்க உள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com