முழுமையான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த கோரி ஓய்வூதியர்கள் போராட்டம்

ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு அமல்படுத்தும் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள முரண்பாடு மற்றும் குறைகளை களைந்து முழுமையான

ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு அமல்படுத்தும் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள முரண்பாடு மற்றும் குறைகளை களைந்து முழுமையான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மூலமாக முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் புதன்கிழமை நடைபெற்றது.  கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு  ஓய்வூதியர் சங்க கோவை மாவட்டச் செயலாளர் அரங்கநாதன் தலைமை வகித்தார்.  
இதில்,   ஓய்வூதியர்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்த மனுவை ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் அளித்தனர். பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதில்,  மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கான முழுமையான செலவுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்படாத சத்துணவு, அங்கன்வாடி, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி ஓய்வூதியர்களை இணைக்க வேண்டும்.
பணியில் இருக்கும் அரசு ஊழியர்களைப் போல 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சமும், நாள்பட்ட தொடர் சிகிச்சை பெற வேண்டிய நோய்களுக்கு உச்சவரம்பற்ற காப்பீடும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com