லாரி ஓட்டுநர் கொலை: போலீஸ் விசாரணை

அன்னூர் அருகே உள்ள பச்சாபாளையம் குட்டை அருகே கொலை செய்யப்பட்ட நிலையில் லாரி ஓட்டுநர் சடலத்தை  போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர்.

அன்னூர் அருகே உள்ள பச்சாபாளையம் குட்டை அருகே கொலை செய்யப்பட்ட நிலையில் லாரி ஓட்டுநர் சடலத்தை  போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
சூலூர் அருகே மேற்கு அரசூர், விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன் (22). இவர் லாரி ஓட்டுநரான இவர் வழக்கம்போல் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அன்னூர் அருகே பச்சாபாளையம் செய்யாங்குட்டை பகுதியில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக மணிகண்டன் குடும்பத்துக்கு அன்னூர் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். 
இதையடுத்து அங்கு சென்ற அவரது சகோதரர் தாமரைகண்ணன், கொலை செய்யப்பட்டு இருப்பது தனது சகோதரன் மணிகண்டன் என்பதை உறுதி செய்தார். இதுகுறித்து தாமரைகண்ணனிடம் விசாரித்ததில், வீட்டுக்கு அருகில் வசிக்கும் லாரி ஓட்டுநர் ரஞ்சித்தும், மணிகண்டனும் நண்பர்களாக இருந்தனர். இதனால் அடிக்கடி ரஞ்சித் வீட்டுக்கு மணிகண்டன்  சென்று வந்தபோது ரஞ்சித்தின் மனைவி சத்யாவுக்கும், மணிகண்டனுக்கும் இடையே நெருக்கம் எற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ரஞ்சித், அவரது மைத்துனர் தர்மராஜ் ஆகியோர் இருவரையும் கண்டித்துள்ளனர். 
இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி மணிகண்டனும், சத்யாவும் இருசக்கர வாகனத்தில் செல்வதைப் பார்த்த ரஞ்சித் இருவர் மீதும் பேரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மணிகண்டனுக்கும், ரஞ்சித்துக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரஞ்சித் மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரும் மணிகண்டனை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். 
இந்நிலையில் 11ஆம் தேதி பணிக்கு சென்ற மணிகண்டன் பச்சாபாளையத்தில் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தாமரைகண்ணன் தெரிவித்துள்ளார்.    
இதுகுறித்து அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக  உள்ள ரஞ்சித், தர்மராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com