போனஸ் வழங்கக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி சிஐடியூ டாஸ்மாக் ஊழியர்

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி சிஐடியூ டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ கோயம்புத்தூர் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,  லாபத்தில் இயங்கும் டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ், 20 சதவீத கருணைத் தொகை என மொத்தம் நாற்பது சதவீத போனஸ் வழங்க வேண்டும்.  
அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில் பொதுப் பணியிட மாறுதலைச் செயல்படுத்த வேண்டும். நிலையான சட்டத்தை உருவாக்கி பணிவரன் முறைப்படுத்த வேண்டும்.
மதுபான பாட்டில்களை கடைகளுக்கு கொண்டு வரும் ஒப்பந்த சுமைப் பணியாளர்களே அவற்றை இறக்கித்தர வேண்டும். பணம் கேட்டு மிரட்டும் அரசியல் கட்சிகளின் நபர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் விற்பனையை முறைப்படுத்த கேஷ் கவுன்ட்டர், சேல்ஸ் கவுன்ட்டர், பில்லிங் மிஷின், கண்காணிப்பு கேமரா, நவீன பணப் பெட்டகம், குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித்தர வேண்டும்.
சென்னையைப் போல விற்பனை பணத்தை நிர்வாகமே நேரடியாக வசூல் செய்ய வேண்டும். ஆய்வின்போது ஏற்படும் குறைபாடுகளுக்கு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் ஜான் அந்தோணிராஜ், பொருளாளர் ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் செந்தில்பிரபு, சரவணன், முத்து விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com