ஹேக்கத்தான் போட்டிக்கான பதாகைகள் அறிமுக நிகழ்ச்சி

கோவை மாநகரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நடைபெற உள்ள ஹேக்கத்தான் போட்டிக்கான பதாகைகள் அறிமுக நிகழ்ச்சி கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. சர்வதேச தொழில் முனைவோர் அமைப்பின் (டை) கோவை கிளை சார்

கோவை மாநகரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நடைபெற உள்ள ஹேக்கத்தான் போட்டிக்கான பதாகைகள் அறிமுக நிகழ்ச்சி கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சர்வதேச தொழில் முனைவோர் அமைப்பின் (டை) கோவை கிளை சார்பில் வரும் 29, 30ஆம் தேதிகளில் ஹேக்கத்தான் போட்டி, டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான பதாகைகள் வெளியிடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் பங்கேற்று பதாகைகளை வெளிட்டார்.
இது தொடர்பாக டை அமைப்பின் கோவை கிளைத் தலைவர் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் கூறும்போது, மாநகரில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் தீர்வுகளைக் கண்டறியும் வகையில் ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், 150 குழுக்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
மெஷின் லேர்னிங், ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ், ரோபோடிக்ஸ், டேட்டா அனலடிஸ் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது என்றார்.
அமைப்பின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர் கோகுல் தாமோதரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com