ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியின் ஐ.ஏ.எஸ். அகாதெமி, பாரதி டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையம் ஆகியவை சார்பில் அரசு விடுமுறை நாள்களில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற இதன் தொடக்க விழாவுக்கு, கல்லூரிச் செயலாளர் கே.கே.பாலுசாமி தலைமை வகித்தார். முதல்வர் ஆர்.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் முருகன் குத்துவிளக்கேற்றி பயிற்சியைத் தொடக்கிவைத்தார்.
சிறப்பு விருந்தினராக பயிற்சி ஆட்சியர் ராஜ்குமார் பங்கேற்றுப் பேசினார். இதில், மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையிலும், அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் எம்.அண்ணாதுரை, டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மைய மாநில ஒருங்கிணைப்பாளர் கே.கணேஷ், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com