சித்தோடு அருகே தகராறு செய்த ரௌடி அடித்துக் கொலை

பவானி அருகே குடிநீர் பிடிக்கும்போது கத்தியால் குத்தி தகராறு செய்த ரெளடியை பொதுமக்கள் சுற்றிவளைத்துத் தாக்கியதில் வியாழக்கிழமை உயிரிழந்தார். 

பவானி அருகே குடிநீர் பிடிக்கும்போது கத்தியால் குத்தி தகராறு செய்த ரெளடியை பொதுமக்கள் சுற்றிவளைத்துத் தாக்கியதில் வியாழக்கிழமை உயிரிழந்தார். 
சித்தோடு, ஆர்.என்.புதூர், மாதேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் செல்வன் (எ) சித்திராஜ் (38). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஏற்கெனவே சிறைத் தண்டனை அனுபவித்த செல்வன் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டார். தனது தாய் இந்திராணியுடன் வசித்து வந்த செல்வன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், அப்பகுதியில் வியாழக்கிழமை குடிநீர் பிடிக்கும்போது குடத்தை எடுத்துவிட்டு கை, கால் கழுவியதை அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த செல்வன், ரங்கநாதனைக் கத்தியால் குத்தியதோடு மிரட்டல் விடுத்தாராம். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செல்வனைச் சுற்றிவளைத்துத் தாக்கினர். இதைத் தடுத்த தாய் இந்திராணியும் தாக்கப்பட்டார். இந்நிலையில், தாக்குதலில் மயக்கமடைந்த செல்வனை உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்தபோது செல்வன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.  ரெளடியை தாக்கியோர் குறித்து சித்தோடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com