வணிக வேளாண்மைக் கருத்தரங்கு

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி பாசன சபை அலுவலக வளாகத்தில் வணிக வேளாண்மை, நீர் மேலாண்மைக் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி பாசன சபை அலுவலக வளாகத்தில் வணிக வேளாண்மை, நீர் மேலாண்மைக் கருத்தரங்கம் நடைபெற்றது.
 கிரீன் ஸ்டார் ஸ்பிக் நிறுவனம், கீழ்பவானி முறைநீர் பாசன சபை, மாவட்ட உழவர் விவாதக் குழு ஆகியவை இணைந்து நடத்திய இக்கருத்தரங்குக்கு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் பா.அ.சென்னியப்பன் தலைமை வகித்தார். கீழ்பவானி பாசன கூட்டமைப்புத் தலைவர் பொ.காசியண்ணன், பகிர்மான கமிட்டி தலைவர்  கு.ரா.லோகநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட உழவர் விவாதக் குழுத் தலைவர் தூ.நா.ராமசாமி, மாவட்ட மஞ்சள் விவசாயிகள் சங்கச் செயலாளர் எஸ்.ஏ.பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 கருத்தரங்கில், விவசாயிகள் கூட்டமைப்பாக செயல்பட்டதால்தான் மத்திய, மாநில அரசு நபார்டு வங்கித் திட்டங்கள் நமக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டமைப்பு மூலமாக விளைபொருள்களை சந்தைப்படுத்தி, விலை கிடைக்கும் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
 கரும்பு சாகுபடியைப் பொருத்த அளவில் பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தால்தான் ஏக்கருக்கு 100 டன் மகசூல் எடுக்க முடியும். காலிஃபிளவரில் சூரிய ஒளிபடாமல் இருந்தால் நல்ல விலை கிடைக்கும் நிலை ஏற்படுகிறது. நிலக்கடலை எனில் கார்த்திகை - மார்கழி பட்டங்களில் பயிரிட்டால் நோய் தாங்கும் சக்தியும் கூடுதல் மகசூலும் கிடைக்கும் என்பன உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது.
 2070-இல் நீரின் நிலை குறித்து அப்துல் கலாம் எழுதிய தொகுப்பை கோ.தியாகராஜன் வெளியிட மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் பி.சி.செங்கோட்டையன் பெற்றுக் கொண்டார்.
 இதில், உழவர் விவாதக் குழு அமைப்பாளர்கள், பாசன சபை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்ட உழவர் விவாதக் குழு செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com